கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை: இங்கிலாந்து வீரர் ஆலி போப் மிரட்டல்
7 புரட்டாசி 2024 சனி 17:25 | பார்வைகள் : 8202
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலி போப் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப், சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ஓட்டங்களே எடுத்த போப், மூன்றாவது போட்டியில் தனது சொந்த மைதானமான ஓவல் மைதானத்தில் விளையாடி, விமர்சனங்களை முறியடித்து சதம் அடித்தார்.
இது அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7-வது சதமாகும்.
சிறப்பு என்னவென்றால், இந்த 7 சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடிக்கப்பட்டவை!
147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இத்தகைய சாதனையை படைத்ததில்லை.
இதன் மூலம், ஆலி போப் உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan