அனைத்து அரசியல் கட்சிகளின் அழுத்தங்களையும் மதித்து நடப்பேன்.. புதிய பிரதமர் உறுதி..!
7 புரட்டாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 1858
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள Michel Barnier, நேற்று இரவு தொலைக்காட்சி வழியாக உரையாடினார். அதன்போது சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
'இது ஒரு கடினமான தருணம். முன்னோடியில்லாதது. இதற்கு முன்னர் நாம் அனைத்து கட்சியினரது கருத்துக்களையும் செவிமடுத்தது குறைவு. ஆனால் இனிமேல் அவ்வாறில்லை. அனைத்து கட்சிகளுடன் இணைந்தே நாம் பயணிக்க உள்ளோம். அனைத்து அரசியல் அழுத்தங்களையும் நான் மதிக்கிறேன்." என அவர் தெரிவித்தார்.
'இணைவரும் இணைந்து செயலில் இறங்கவேண்டிய தருணம் இது. பேச்சுவார்த்தைகளுக்மு அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்ள நினைக்கிறேன்!' என மேலும் தெரிவித்தார்.