Paristamil Navigation Paristamil advert login

பரபரப்பை ஏற்பட்டுத்திய அஜித்தின் புகைப்படங்கள்

பரபரப்பை  ஏற்பட்டுத்திய அஜித்தின் புகைப்படங்கள்

11 ஐப்பசி 2024 வெள்ளி 08:27 | பார்வைகள் : 3292


அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஸ்பெயினில் படப்பிடிப்பு நடைபெறுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று, ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் ஸ்டைலான ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோட் சூட் அணிந்து, கூலிங் கண்ணாடியுடன் ஸ்டைலாக இருந்தார். அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்துள்ளனர்.

இன்று, அவர் திடீரென அஜித்தின் இன்னொரு லுக்கை வெளியிட்டார். அந்த லுக்கில், தலைமுடியும் தாடியும் கருப்பாக, வித்தியாச காஸ்ட்யூம் மற்றும் கூலிங்கும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு கெட்டப்புகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால்தான் அஜித் குறைந்தது இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது.மேலும் இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் அவரது வித்தியாசமான கெட்டப்பும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மொத்தத்தில், அஜித் மற்றும் த்ரிஷாவின் கெட்டப்புகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்