'விடுதலை' 3ஆம் பாகம் உருவாகிறதா?
11 ஐப்பசி 2024 வெள்ளி 08:25 | பார்வைகள் : 4940
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்பட்டது, தற்போது தொழில்நுட்ப பணிகள், கிராபிக்ஸ் மற்றும் டி-ஏஜிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடுதலை 2 பாகம், விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியார் காதல் போர்ஷன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், மூன்றாம் பாகத்தையும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இருப்பதால், ரன்னிங் டைம் 4 மணி நேரத்தை விட அதிகமாக இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு இரண்டாம் பாகத்தை இரண்டு பாகங்களாக பிரித்து, மூன்றாம் பாகத்தை தனியாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
’விடுதலை 2’ படத்தை முடித்துவிட்டு, ’வாடிவாசல் ’படத்திற்கு செல்வேன் என்று வெற்றிமாறன் ஏற்கனவே அறிவித்தார். ’வாடிவாசல் முடிந்த பிறகு ’விடுதலை’ மூன்றாம் பாகத்தை உருவாக்குவாரா அல்லது ’விடுதலை 2’ படத்தை முடித்தவுடன் மூன்றாம் பாகத்தை உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan