பாகிஸ்தானில் புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி
10 ஐப்பசி 2024 வியாழன் 09:12 | பார்வைகள் : 5192
முல்தான் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி புரூக் இரட்டை சதம் விளாசினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பாடி வருகிறது.
ஸ்கோருடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய ஜோ ரூட் (Joe Root) இரட்டை சதம் அடித்தார். இது அவரது 6வது இரட்டைசதம் ஆகும்.
இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக இரட்டை சதம் (4) அடித்த மற்றும் பல நாடுகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரூட் இணைந்தார்.
மறுமுனையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் (Harry Brook) தனது முதல் இரட்டைசதத்தை விளாசினார்.
இவர்களது பார்ட்னர்ஷிப் 400 ஓட்டங்களை கடந்த நிலையில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 658 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு 2022யில் 657 ஓட்டங்கள் (ராவல்பிண்டி) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
தற்போதுவரை இங்கிலாந்து அணி 676 ஓட்டங்கள் குவித்துள்ளது. ரூட் 259 ஓட்டங்களுடனும், புரூக் 236 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan