ராஜா ராணி மூன்றாம் பாகம் விரைவில்...
10 ஐப்பசி 2024 வியாழன் 07:42 | பார்வைகள் : 5067
கடந்த 2017 ஆம் ஆண்டு ’ராஜா ராணி’ என்ற தொடர் தொடங்கி 2019 வரை ஒளிபரப்பானது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்திருந்த நிலையில் அவர்களது இயல்பான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது சஞ்சீவ் - ஆலியா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவான நிலையில் சஞ்சீவ் இதில் நடிக்கவில்லை என்றாலும் ஆலியா மானசா தொடர்ந்து நடித்தார் என்பதும் சித்து நாயகனாக நடித்த இந்த தொடரும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது’ ராஜா ராணி’ மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ’ராஜா ராணி’ தொடரின் இரு பாகங்களை இயக்கிய பிரவீன் பென்னட் இந்த தொடரை இயக்க இருப்பதாகவும், இந்த தொடரில் மீண்டும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடிக்க உள்ளனர்.
இந்த பதிவில் “தயாராக இருங்கள், நண்பர்களே! ராஜா ராணி மூன்றாம் பாகம் விரைவில்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan