ஒரே நாளில் மூன்று காவல்துறையினர் பலி..!
8 ஐப்பசி 2024 செவ்வாய் 10:10 | பார்வைகள் : 3538
நேற்று ஒக்டோபர் 7, திங்கட்கிழமை ஒரே நாளில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிய முடிகிறது.
Evry (Essonne) மற்றும் Montpellier (Hérault) நகரங்களில் பணிபுரியும் தேசிய காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் நேற்று தங்களது சேவைத் துப்பாக்கியினைப் பயன்படுத்து, தற்கொலை செய்துள்ளனர். அதேவேளை, பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவர் Montereau-Fault-Yonne (Seine-et-Marne) நகரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் 24 வயதுடையவர் எனவும், அவரது மனைவில் வீட்டில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, தற்கொலை செய்துகொண்ட இருவரும் 47 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.