Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் ஜெயசூரியா! 

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் ஜெயசூரியா! 

7 ஐப்பசி 2024 திங்கள் 11:45 | பார்வைகள் : 5433


இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா, அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

இம்மாதம் 13ஆம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி Dambullaவில் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இடைக்கால தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருந்த ஜெயசூரியா இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு, இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சனத் ஜெயசூரியா அக்டோபர் முதல் மார்ச் 31, 2026 வரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.     

வர்த்தக‌ விளம்பரங்கள்