Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல்.. நால்வர் கைது!!

பரிஸ் : சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல்.. நால்வர் கைது!!

7 ஐப்பசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 9485


Champ-de-Mars பகுதியில் வைத்து இரு பெண் சுற்றுலாப்பயணிகளை தாக்கி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latvia நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். சனிக்கிழமை நள்ளிரவு அவர்கள் மதுபான விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய போது, அவர்களை பின் தொடர்ந்து சென்று வழிமறித்த நால்வர் கொண்ட குழு, அப்பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்பகுதியில் இரவுநேர கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் காப்பாற்றினர். மேலும் குறித்த நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் எகிப்த் மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்