Paristamil Navigation Paristamil advert login

'தளபதி 2' உருவாகிறதா?

'தளபதி 2' உருவாகிறதா?

6 ஐப்பசி 2024 ஞாயிறு 16:06 | பார்வைகள் : 5911


33 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்த ’தளபதி’ படம், இருவரும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை பெற்ற நிலையில், மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, கமல்ஹாசன் உடன் ‘தக்லைஃப்’ படத்திற்காக இணைந்த மணிரத்னம், தற்போது ரஜினியுடன் இணைய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ’கூலி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதை அடுத்து ’ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என்றும், இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, அவர் மணிரத்னம் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 12ஆம் தேதி, ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி’ படத்திற்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் படம், தளபதி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதை அம்சம் கொண்ட படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்