Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குழுமோதலில் சிறுவன் படுகாயம்.. மூவர் கைது!

பரிஸ் : குழுமோதலில் சிறுவன் படுகாயம்.. மூவர் கைது!

6 ஐப்பசி 2024 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 2259


பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான். இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 4, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் இந்த மோதல் 15 ஆம் வட்டாரத்தின் rue Emeriau வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரு தரப்பாக பிரிந்த 13 தொடக்கம் 19 வயதுடைய சிலர், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  கத்தி, தடி, ஹாக்கி மட்டை, தீ அணைப்பான் குடுவை போன்றவற்றினை பயன்படுத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

ஹாக்கி விளையாடும் மட்டையினால் சிறுவன் ஒருவன் தலையில் தாக்கப்பட்டதில் - படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

காயமடைந்த சிறுவன் 14 வயதுடையவன் எனவும், மோதலில் 15 பேர் வரை ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த சிறுவன் Necker மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

சம்பவம் தொடர்பில் 14 தொடக்கம் 19 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்