Paristamil Navigation Paristamil advert login

நூதன முறையில் கஞ்சா விற்ற 16 பேருக்கு சிறை!!

நூதன முறையில் கஞ்சா விற்ற 16 பேருக்கு சிறை!!

6 ஐப்பசி 2024 ஞாயிறு 10:16 | பார்வைகள் : 8365


Créteil (Val-de-Marne) நகரை தலைமையிடமாகக் கொண்டு,நூதன முறையில் பொதி செய்து கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த 16 பேர் கொண்ட கும்பலுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

"Nutellhash, Haribeuh, Kirikou, Remontada Max94" என விதம் விதமாக பெயரிட்டு,  கவர்ச்சிகரமான பொதிகளில் கஞ்சாவினை விற்பனை செய்துவந்தவர்களே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் தலைமையாக செயற்பட்ட ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், €50,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு, எட்டு, ஆறு மற்றும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இணையம் ஊடாகவும், WhatsApp, Telegram போன்ற செயலிகள் ஊடாகவும் இந்த விற்பனையை மேற்கொண்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்