தமிழகத்தில் முதலீடு: ஸ்டாலினுடன் அனில் பேச்சு

5 ஐப்பசி 2024 சனி 01:33 | பார்வைகள் : 5257
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும் அதன் மின் நிலையங்களை, தமிழகத்தில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழில் அதிபருமான அனில் அம்பானி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் உயர் மட்டத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாயிலாக தமிழகத்தில் பசுமை மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலினையும் அனில் அம்பானி நேற்று சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1