Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு

கனடாவில் ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு

3 ஐப்பசி 2024 வியாழன் 10:15 | பார்வைகள் : 4757


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆசிரியர் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலைமை மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் எண்ணிக்கை என்பன அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் புதிய கல்வி அமைச்சர் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தக்க வைத்துக் கொள்வதில் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்