ஒலிம்பிக் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்ட ஆன் இதால்கோவின் நீச்சல் உடை..!
2 ஐப்பசி 2024 புதன் 16:57 | பார்வைகள் : 14639
ஆன் இதால்கோ சென் நதியில் நீந்தும் போது அணிந்திருந்த நீச்சல் உடை தற்போது ஒலிம்பிக் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் உள்ள 'ஒலிம்பிக் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் இதனை விரைவில் பார்வையிட முடியும்.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கடந்த ஜூலை 17 ஆம் திகதி சென் நதியில் நீந்தியிருந்தார். அவருடன் பரிஸ் ஒலிம்பிக்கின் இயக்குனர் Tony Estanguet உடன் நீந்தியிருந்தார். இரண்டு நிமிடங்களும், 30 விநாடிகளும் இடம்பெற்ற இந்த நீச்சல், 'சென் நதி ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்கு தயாராகியுள்ளது' என்பதை அறிவிக்கவே இடம்பெற்றிருந்தது.
சுவிட்சர்லாந்தில் 1993 ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan