இலங்கையில் டொலரின் விற்பனை பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

2 ஐப்பசி 2024 புதன் 10:16 | பார்வைகள் : 5553
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகும்.
கடந்த 2023 ஜூன் 8 ஆம் திகதி இறுதியாக டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 300 ரூபாவுக்கும் குறைவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025