இவ்வாரம் - €160 மில்லியன் யூரோக்கள் தொகையுடன் EuroMillions..!!
2 ஐப்பசி 2024 புதன் 09:44 | பார்வைகள் : 19904
EuroMillions சீட்டிழுப்பில் இவ்வாரம் €160 மில்லியன் யூரோக்கள் தொகை வெற்றி பெறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி €143 மில்லியன் யூரோக்கள் வெற்றிபெற சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் சரியான இலக்கங்களை கண்டறிந்து எவரும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், தற்போது €160 மில்லியன் யூரோக்களுடன் நாளை மறுநாள் ஒக்டோபர் 4 ஆம் திகதி சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது.
8 - 22 - 29 - 41 - 42 ஆகிய இலக்கங்களுடன், நட்சத்திரக் குறியீடு 9 மற்றும் 11 ஆகிய இலக்கங்கள் இருந்தால், அவர் €160 மில்லியன் யூரோக்கள் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் 230 மில்லியன் யூரோக்கள் வென்றிருந்ததே EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan