இஸ்ரேல் மீது ஈரானிய படையினர் தாக்குதல் - கனடா கண்டனம்
2 ஐப்பசி 2024 புதன் 09:05 | பார்வைகள் : 8508
இஸ்ரேல் மீது ஈரானிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களை கனடிய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி வன்மையாக கண்டித்துள்ளார்.
மேலும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும் என அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஈரானிய ஏவுகணை தாக்குதல் பிராந்திய வலயத்தில் பாரிய போரை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இஸ்ரேலிய அரசாங்கம் நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என கனடா தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வு எட்ட முடியும் என கருதுவதாக கனடிய வெளி விவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan