Philippine கொலை : குடும்பத்தினரை சந்தித்த உள்துறை அமைச்சர்!!
2 ஐப்பசி 2024 புதன் 08:48 | பார்வைகள் : 15812
கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி Philippine எனும் 19 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் Bruno Retailleau, நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி Philippine இன் குடும்பத்தினரைச் சந்தித்தார். Montigny-le-Bretonneux (Yvelines) நகரில் உள்ள அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கிருந்த பெற்றோர் சகோதர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் - நம்பிக்கையும் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
'இதுபோன்ற ஒரு நிகழ்வை எதிர்கொண்டவர்களுக்கு நாம் வெறுமனே சோகத்தையோ, கோபத்தையோ வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. நீதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!' என அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan