Seine-Saint-Denis : சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல்..!
30 புரட்டாசி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 14256
சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றும் ஒருவர், அவரது வீட்டில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
Montreuil (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் செப்டம்பர் 26, வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரவு 10.40 மணி அளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு ஒன்று குறித்த அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பரிசில் உள்ள prison de la Santé, சிறைச்சாலையில் பாதுகாவலராக பணிபுரியும் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகக்கவசம் அணிந்து கைத்துப்பாக்கியுடன் உள்நுழைந்த அவர்கள், அதிகாரியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது 1989 ஆம் ஆண்டு பிறந்த அவரது மனைவியும் உடன் இருந்ததாகவும், அவர் தாக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan