Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பிரைட் ரைஸ் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

இலங்கையில் பிரைட் ரைஸ் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

29 புரட்டாசி 2024 ஞாயிறு 12:52 | பார்வைகள் : 8874


இலங்கையில் பிரைட் ரைஸ் (fried rice) மற்றும் கொத்து ரொட்டியின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, முட்டை ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்