துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி.. மூவர் காயம்!
29 புரட்டாசி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 21552
மார்செய் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். வீதியின் அருகே நின்றிருந்த குழு ஒன்றின் மீது ஆயுததாரிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மார்செயின் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள பழைய ஐரிஸ் நகரம் என அழைக்கப்படும் Cité des Iris பகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு இத்துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது. வீதியின் அருகே நின்றிருந்த குழு ஒன்றை நோக்கி மகிழுந்தில் வந்த ஆயுதராரிகள் சரமாரியாக சுட்டனர்.
இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஆயுததாரிகள் சில கிலோமீற்றர்கள் பயணித்து, அவர்கள் பயன்படுத்திய மகிழுந்தினை தீ வைத்து எரிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan