மாதம் €100,000 யூரோக்கள் சம்பாதித்த - ஆறு பேருக்குச் சிறை.!
29 புரட்டாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 11269
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம் €100,000 யூரோக்கள் வரை சம்பாதித்துக்கொண்டிருந்த ஆறு பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Pontcharra (Isère) நகரை தலமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்து €200,000 யூரோக்கள் பணமும், 1 கிலோ கஞ்சா, 800 கிராம் கொக்கைன், 725 அனுமதி பெறாத சிகரெட் பெட்டிகள், 3 ரைபிள் துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
நீண்ட நாட்களாக ரகசியமாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், செப்டம்பர் 24 ஆம் திகதி அன்று 167 காவல்துறையினரைக் கொண்ட பெரும் படை ஒன்றுடன் களத்தில் இறங்கினார்கள்.
அந்த நடவடிக்கையில் மொத்தமாக 13 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 முக்கிய முற்றவாளிகளுக்கு நேற்று முன்தினம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan