Essonne : பாடசாலை மாணவனுக்கு சுத்தியல் தாக்குதல்...!!
28 புரட்டாசி 2024 சனி 17:05 | பார்வைகள் : 9739
பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் மாணவன் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.
Montgeron (Essonne) நகரில் உள்ள lycée Rosa-Parks எனும் உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் சுத்தியல் ஒன்றினால் மாணவன் ஒருவனின் தலையில் தாக்கப்பட்டதில், மிக மோசமாக காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். இந்த மோதல் விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கல்வி அமைச்சர் Anne Genetet "ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan