Philippine படுகொலை! - இணையம் மூலமாக நன்கொடை சேகரிப்பு..!

25 புரட்டாசி 2024 புதன் 17:19 | பார்வைகள் : 15219
பரிசில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 19 வயதுடைய Philippine எனும் இளம் பெண்ணின் குடும்பத்தினருக்காக இணையம் மூலமாக நன்கொடை சேகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். Leetchi எனும் பாதுகாப்பான நன்கொடை சேகரிப்பாளர்கள் இந்த நன்கொடை சேகரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
**
Paris-Dauphiné University பயின்றுவந்த குறித்த இளம் பெண், வெள்ளிக்கிழமை நண்பகல் 2 மணி அளவில் தனது மதிய உணவு இடைவேளையின் போது வெளியே சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மறுநாள் சனிக்கிழமை பரிசின் தெற்கு பகுதியில் உள்ள Bois de Boulogne பூங்காவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்த Taha O என்பவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025