அவதானம்... வார இறுதி நாட்களில் gare du Nord நிலையத்தில் போக்குவரத்துகள் பாதிப்பு!
25 புரட்டாசி 2024 புதன் 11:00 | பார்வைகள் : 15666
(புகைப்படத்தில் : திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம். 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது)
எதிர்வரும் ஒக்டோபர் 25 முதல் நவம்பர் 25 ஆம் திகதி வரையுள்ள அனைத்து வார இறுதி நாட்களிலும் gare du Nord நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. பயணிகள் தங்கள் பணத்தை பிற்போடுவது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Vacances de la Toussaint விடுமுறையில் இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஒக்டோபர் 25 - 26- 27
நவம்பர் 1 - 2 -3
நவம்பர் 23 - 24
ஆகிய திகதிகளில் gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடைப்படும் எனவும், Saint-Denis நகரில் உள்ள தொடருந்து மேம்பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதால் இந்த போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
RER B மற்றும் D,
H மற்றும் K வழிச் சேவைகள்,
Paris-Laon மற்றும் Paris-Beauvais நகரங்களை இணைக்கும் TER சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan