la Courneuve. இல் "வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த வேண்டும்" உள்துறை அமைச்சர்.
24 புரட்டாசி 2024 செவ்வாய் 08:14 | பார்வைகள் : 9474
பிரதமர் Michel Barnier தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டு, துறைசார் அமைச்சர்கள் தங்கள் தங்கள் பொறுப்பினை ஏற்ற பின்னர், நேற்று காலையில் பிரதமர் மாளிகையில் காலை உணவுடன் அமைச்சர்களின் முதலாவது சந்திப்பு இடம் பெற்று இருந்தது, அதனைத் தொடர்ந்து மாலையில் அரசு தலைவர் மாளிகையில் 25 நிமிடங்கள் நீடித்த அமைச்சர்களுக்கான சந்திப்பு இடம் பெற்றது.
இதனை அடுத்து உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வலதுசாரி கட்சியின் உள்துறை அமைச்சர் Bruno Retailleau அவர்கள் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக Seine-Saint-Denis பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் செரித்து வாழும் La Courneuve பகுதியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் சென்றிருந்தார்.
அங்கு அதிகாரிகள் மத்தியில் பேசிய அமைச்சர் "நம்பமுடியாத வேலைகளை கடினமான சூழ்நிலையில் நிகழ்த்தும் காவல்துறையினரின் அருகில் தான் எப்போதேம் நிற்பேன்" என்றும் "போதைவஸ்து கடத்தல், அதன் பாவனை, மற்றும் நெட்வேர்க் இவற்றை அடியோடு இல்லாது ஒழிக்கும் பணியில் காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் உண்டு " எனவும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் Bruno Retailleau ஜேர்மன் சான்ஸ்லர் Olaf Scholz அவர்களின் இன்றைய நடைமுறையை உதாரணமாக கூறிய அவர் "சட்டவிரோத குடியேற்றத்தை, முறையற்ற வெளிநாட்டவர்களை கடுமையான நடவடிக்கை மூலம் கட்டுப்படுத வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் "நான் எந்த குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்" எனவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan