சென்னை, குமரி, புதுக்கோட்டை உட்பட 14 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு

24 புரட்டாசி 2024 செவ்வாய் 06:43 | பார்வைகள் : 5716
பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில், தமிழகத்தில் 14 இடங்களில் இன்று (செப்.,24) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விசாரணை
இதை தொடர்ந்து, மூவரிடமும் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், 36; காதர் நவாஸ் ஷெரிப், 35, அகமது அலி உமரி, 46, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ளது. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சோதனை
இந்த வழக்கு தொடர்பாக, இன்று(செப்.,24) தமிழகத்தில் சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதாரங்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலங்களில் சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.