சனாதன தர்மம் என்பது எளிமையானது.- கவர்னர் ஆர்.என்.ரவி

23 புரட்டாசி 2024 திங்கள் 03:32 | பார்வைகள் : 7046
நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில் 40 ஆண்டுகளாக இந்திய தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக அயலக ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அதற்கான முயற்சிகள் செய்தார்கள். அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம்.
நமது தர்மம் என்றுமே அழிக்க முடியாதது. அதனை பலவீனப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது. ஆனால் அவற்றில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். சனாதன தர்மம் என்பது எளிமையானது.
ஆனால் வெளியே தெரியும் போது சிக்கலானதாக தெரிகிறது. ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகின்றோம். இதை பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி எடுக்கின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025