Paristamil Navigation Paristamil advert login

ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 3820


நடிகர் ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவருடைய மனைவி ஆர்த்தியோ "என்னுடைய சம்மதம் இல்லாமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ’பிரதமர்’ புரமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, தனது விவாகரத்து முடிவு குறித்து சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். மேலும், பாடகி கெனிஷாவை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம் என்றும், அவர் பல உயிர்களை காப்பாற்றியவர் என்றும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு மையத்தை அமைக்க இருக்கிறோம், மேலும் பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவருடைய மனைவியின் குடும்பத்தினரே நிர்வகித்து வந்ததாக கூறிய நிலையில், தற்போது அவர் அந்த கணக்கை மீட்டுள்ளார். அதில் முதல் பதிவாக "புதிய நான்" என குறிப்பிட்டுள்ளதை அடுத்து இனிமேல் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டாவில் இருந்த ஆர்த்தியின் புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்