அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் காயம்
15 ஆவணி 2024 வியாழன் 13:26 | பார்வைகள் : 11845
அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் வளாகத்தில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேர் காயமடைந்துள்ளதுடன், தகவல் அறிந்து பொலிசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதில், ஆயுதங்கள் வைத்திருந்தனர் என கூறி அந்த பகுதியில் இருந்த 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கான குற்றச்சாட்டு எதுவும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை.
ஒருவர் அனுமதி பெறாத துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கிறார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரைஊறடங்கு தொடரும் என தெரிவித்து உள்ளது.
அவர்கள் இருவரும் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. இவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.
இதுபற்றி பொலிசார் விசாரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan