சவுதி இளவரசர் மீது கொலை முயற்சி....?

15 ஆவணி 2024 வியாழன் 13:18 | பார்வைகள் : 9868
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கும் யூத இஸ்ரேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பல வருட காலமாக நீடித்து வருகின்றது.
இளவரசர் சல்மானின் தலையீட்டால் நல்லுறவு தொடங்கியது.
இது அண்டை முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சவுதி இளவரசர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், இளவரசர் முஹமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.