பெண் காவல்துறை வீரர் வீதியில் வைத்து படுகொலை - முன்னாள் கணவர் கைது
.jpg)
3 புரட்டாசி 2023 ஞாயிறு 17:02 | பார்வைகள் : 15263
பெண் காவல்துறை வீரர் ஒருவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Savoie நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை காலை La Croix-de-la-Rochette (Savoie) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் காவல்துறை வீரர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட முயற்சித்த போது அவரை 61 வயதுடைய அவரது முன்னாள் கணவர் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் அப்பெண் காவல்துறை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார். Nice நகரில் தாதியாக பணிபுரியும் அவரது முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1