தங்கலான்' ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது

14 ஆவணி 2024 புதன் 15:38 | பார்வைகள் : 7868
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தங்கம் எடுக்கும் பழங்குடியின மக்களை பற்றிய கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் காலத்தில் பழங்குடியின மக்கள் தங்கம் எடுப்பதற்காக எப்படி அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.
சுமார் 100 கோடி முதல் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித் இணை தயாரிப்பாளராக உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ள நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அவந்திகா என்கிற சூனியக்காரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?
இந்நிலையில் ஞானவேல் ராஜா, மறைந்த அர்ஜுன் லால் சுந்தர் என்பவரிடம் ரூபாய் 10 கோடியே 35 லட்சம் கடன் பெற்றதைத் தொடர்ந்து, இந்த கடனை ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து தற்போது வரை அந்த பணம் திரும்ப செலுத்தப்படாத நிலையில், ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை திவால் என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள தங்கலான் மற்றும் கங்குவா ஆகிய படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'தங்கலான்' படத்தை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நிபந்தனையோடு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் நீதிமன்றத்தில் சற்று முன்னர் டெபாசிட் செலுத்தப்பட்டதை தொடர்ந்து 'தங்கலான்' படத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நாளை திட்டமிட்டது போல் ரிலீஸ் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1