Paristamil Navigation Paristamil advert login

■ சீரற்ற காலநிலை.. 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

■ சீரற்ற காலநிலை.. 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

13 ஆவணி 2024 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 12120


மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு, 24 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய கடுமையான வெப்பத்தை அடுத்து, இன்று பிற்பகலின் பின்னர் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வேகமான காற்று மற்றும் ஒரு சில இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 

Tarn, Aveyron, Cantal, Haute-Loire, Isère, Ain, Rhône, Loire, Puy-de-Dôme, Allier, Nièvre, Saône-et-Loire, Jura, Doubs, Haute-Saône, Côte d'Or, Yonne, Aube, Haute-Marne, Vosges, Meurthe-et-Moselle, Meuse, Marne மற்றும் Ardennes ஆகிய 24 மாவட்டங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இந்த அனர்த்தங்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, Pyrénées-Atlantiques மாவட்டத்தில் இரவு 8 மணியின் பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்