இலங்கை அரச ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிகமாக 6,000 ரூபாய் கொடுப்பனவு
.jpg)
13 ஆவணி 2024 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 3892
அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, இடைக்கால கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவு நிலுவைத் தொகை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு 6,000 ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்குவது தொடர்பான யோசனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது