உகண்டாவில் குப்பை மேடு சரிந்து விபத்து! 18 பேர் பலி
12 ஆவணி 2024 திங்கள் 11:35 | பார்வைகள் : 6275
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக இந்த குப்பை மேடு சரிந்துள்ளதாகவும், அதற்கு அருகில் உள்ள வீடுகள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
இதில் மேலும் பலர் சிக்குண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan