சிலி நாட்டில் கோர விபத்து.... 6 பேர் பலி
3 புரட்டாசி 2023 ஞாயிறு 08:20 | பார்வைகள் : 11765
சிலி நாட்டில் மினி பேருந்து மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டவாளத்தைக் கடந்து சென்ற அந்த பேருந்தில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பேருந்து பாதி தூரம் சென்ற போது மின்னல் வேகத்தில் வந்த பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 5பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சிலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan