விஜய் அரசியலுக்கு வந்தால் தான் சாய்ஸ் இருக்கும் : அண்ணாமலை
10 ஆவணி 2024 சனி 14:24 | பார்வைகள் : 6266
விஜய் வந்தால் தான் சாய்ஸ் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை என தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக நான்கு முனை போட்டி நிலவும். விஜய் வந்தால் தான் சாய்ஸ் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை, 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் புரட்சி இருக்கும். விஜய் வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் கிடைக்கும்.
தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி ஆட்சி அமைப்போம் என கூறினால் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறும். கூட்டணி ஆட்சி அமைப்போம் என திமுக கூறப்போவதில்லை,. அ.தி.முக முடிவு பற்றி எனக்கு தெரியாது. கூட்டணி ஆட்சி என பெரிய கட்சிகள் கூற வில்லை இருப்பினும் 2026-ல் நான்கு முனை போட்டி உறுதி. 2026-ல் தமிழகதத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் தேசிய ஜனநாயக கட்சி தீர்க்கமாக உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan