திருமணத்தை விரும்பாத இளம்தலைமுறையினர்
 
                    3 புரட்டாசி 2023 ஞாயிறு 08:05 | பார்வைகள் : 8003
அமெரிக்காவில் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் பெரும்பாலான இளம்தலைமுறையினர் வாழ்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் திருமணம் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த பதில் கிடைத்தது.
அதாவது, அங்கு வாழும் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஐந்தில் ஒரு பகுதியினர் திருமணம் என்பது மிகவும் பழைய சடங்கு என்று கூறியுள்ளனர். அத்துடன் அது பொருத்தமானதாக இல்லை என்று தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பதில் அளித்தவர்களில் 85 சதவீதம் பேர் மகிழ்ச்சியான அர்ப்பணிப்புள்ள ஒரு காதல் வாழ்க்கைக்கு திருமணம் என்பது தேவையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் 83 சதவீதம் பேர் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.
இதற்கிடையில், காதலில் இருக்கும் மற்றும் திருமணமாகாத 906 பேரிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 61 சதவீதம் தம்பதிகள் தங்களது லிவிங் டுகெதர் வாழ்வில் பணம் தான் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்கா மட்டுமன்றி, சமீபகாலமாக இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வசிக்கும் இளம் தலைமுறையினர் பலரும் லிவிங் டுகெதர் முறைக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan