வாட்ஸ்அப்பில் ஆதார், பான் கார்டு எளிதில் டவுன்லோட் செய்யும் புதிய வசதி
10 ஆவணி 2024 சனி 12:45 | பார்வைகள் : 4335
இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) மிக முக்கியமான ஆவணங்களாகக் கருதப்படுகின்றன.
இவை இல்லாமல் எந்த சேவையையும் பெற முடியாது. அரசாங்க திட்டங்கள் முதல் சின்ன சிம் கார்டு வாங்குவது வரை, இந்த ஆவணங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.
இப்போது, உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை எப்போதும் கையில் வைத்திராவிட்டாலும், அதை வாட்ஸ்அப்பிலேயே (Whatsapp) எளிதாக டவுன்லோடு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு, முதலில் “My Gov” வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணை (9013151515) உங்கள் மொபைலில் Save செய்ய வேண்டும்.
பிறகு, அந்த நம்பருக்கு “Hi” என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
பதிலுக்கு, நமஸ்தே என்று தொடங்கும் ஆட்டோமேட்டிக் மெசேஜ் உங்களுக்கு வரும். அந்த மெசேஜின் இறுதியில் Cowin services, DigiLocker services என 2 சர்வீஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள்அதில் DigiLocker சேவைகளைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ என்டர் செய்து, ஆதார் அல்லது பான் கார்டை எளிதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த வசதி, ஆவணங்களை எளிதாக அணுகுவதற்கும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவியாக இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan