Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நீச்சல் போட்டியின்போது நேரலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விளையாட்டு வீரர்

நீச்சல் போட்டியின்போது நேரலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விளையாட்டு வீரர்

9 ஆவணி 2024 வெள்ளி 16:23 | பார்வைகள் : 8121


அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற சர்வதேச விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் துயரக் காட்சியை பார்வையாளர்கள் நேரலையில் பார்க்க நேர்ந்தது.

அமெரிக்காவின் டெக்சாசில் CrossFit என்னும் அமைப்பு நடத்தும் விளையாட்டுப்போட்டிகளில் செர்பியா நாட்டவரான லாஸர் (Lazar Dukic, 28) என்னும் வீரரும் கலந்துகொண்டிருந்தார்.

நேற்று காலை நடைபெற்ற நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றிருந்த நிலையில், அந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

லாஸர் நீந்திக்கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீருக்குள் மூழ்கியவர் பிறகு மேலே வரவேயில்லையாம். உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் வந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

லாஸர் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உலகின் ஃபிட்டான விளையாட்டு வீரரைக் கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படும் CrossFit போட்டி, நேற்று துயரத்தில் முடிந்தது.


அந்த துயர சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

வர்த்தக‌ விளம்பரங்கள்