இலங்கையில் இளம் தாய் மர்மமான முறையில் மரணம்

18 ஆடி 2023 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 13312
யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சம்பவ இரவு வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025