Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் யார் தெரியுமா?

 பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம்  யார் தெரியுமா?

9 ஆவணி 2024 வெள்ளி 10:23 | பார்வைகள் : 12197


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மற்றும் TRP -யை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்து தற்போது 8வது சீசனுக்கு தயாராகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

போட்டியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்களை கடக்கவேண்டும். போட்டியாளர்களின் அத்தனை உணர்ச்சிகளும் கொட்டப்படும் அந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டும் 100 நாட்களை கடந்து வரும் அந்த ஒரு போட்டியாளரே பிக்பாஸ் சீசனின் வெற்றியாளர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த 7வது சீசனில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், பிக்பாஸ் என்றாலே கமல்ஹாசன் தான் என்று ரசிகர்களுக்கு பதிந்தேவிட்டது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம், ‘சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து தான் விலகுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அடுத்து எந்த பிரபலம் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.

அப்படி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து, எண்டமோல் நிறுவனம் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின்படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வாங்கப்போகும் பிரபலம் நடிகர் சரத்குமார் தான் என்றும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்