Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு பகுதியில்  போர் பதற்றம் - பிரித்தானிய இராணுவத்தினர் தயார்

மத்திய கிழக்கு பகுதியில்  போர் பதற்றம் - பிரித்தானிய இராணுவத்தினர் தயார்

8 ஆவணி 2024 வியாழன் 12:18 | பார்வைகள் : 7251


மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்காக பிரித்தானிய போர்க்கப்பல்களும், உலங்கு வானூர்திகளும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், மத்திய கிழக்கு பகுதியில், பிரித்தானிய இராணுவத்தினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, லெபனானிலிருக்கும் பிரித்தானியர்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வலியுறுத்தியிருந்தது.

லெபானின் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 3,000 பேர் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால், மேலும் பல்லாயிரம் பிரித்தானியர்கள் லெபனானில் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக லெபனான் நாட்டில் வாழ்ந்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்