Paristamil Navigation Paristamil advert login

மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த..

மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த..

8 ஆவணி 2024 வியாழன் 09:59 | பார்வைகள் : 1117


ஆசிரியர்: ரகு அங்க என்ன பேச்சு.. எழுந்து நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு.
ரகு: "ஒரு நாள் சிரிப்பேன். மறுநாள் வெறுப்பேன் மன்னிப்பாயா! மன்னிப்பாயா!"

ஆசிரியர்: மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த.. நம்ம இந்தியாவோட தலைநகரம் என்ன?

ரகு: டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!

ஆசிரியர்: இந்தியாவின் தேசிய விலங்கு என்ன?

ரகு: புலி உறுமுது.. புலி உறுமுது..

ஆசிரியர்: தேசிய பறவை எது ரகு?

ரகு: மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே..

ஆசிரியர்: நம்ம நாட்டின் தேசிய மலர் என்னன்னு தெரியுமா?

ரகு: அடியே ஒத்த தாமர, என் வாழ்வில் வந்த தேவத..

ஆசிரியர்: இந்தியாவின் தேசிய பழம் என்னன்னு சொல்லு?

ரகு: மாம்பழமா மாம்பழம், மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி

ஆசிரியர்: எனக்கு புடிச்சா ஒரு பாட்ட பாடட்டுமா?

ரகு: சூப்பர் பாடுங்க.. சார்!

ஆசிரியர்: நான் அடிச்சா தாங்க மாட்ட.. நாலு நாளு தூங்க மாட்டே..!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்