ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்...!
8 ஆவணி 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 1178
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் மியாசாகியின் நேரப்படி மாலை 4:42 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் நில நடுக்கத்திலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஷிமா மற்றும் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனோயா உள்ளிட்ட நகரங்கள் பலமான நில நடுக்கத்தை உணர்ந்துள்ளன.
மேலும் நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.