Paristamil Navigation Paristamil advert login

ரஜினியின் அண்ணன் நடிகரானார்

ரஜினியின் அண்ணன் நடிகரானார்

7 ஆவணி 2024 புதன் 15:34 | பார்வைகள் : 1313


சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் அவர்களை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்த நிலையில் அவர்களுக்கெல்லாம் நோ சொன்ன அவர் தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சேர்ந்த இயக்குனர் ஏ.ஆர்.ரசீம் என்பவர் ’மாம்பழ திருடி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது குறித்த தகவலை கூறினார்.

எனக்கு முன் பல இயக்குனர்கள் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் அவர்களை சந்தித்து நடிக்க முயற்சித்த நிலையில் அவர்களுக்கெல்லாம் நோ சொல்லிவிட்டார். எனக்கும் முதலில் நோ என்றுதான் சொன்னார். ஆனால் என் கதையை கேளுங்கள் பிடித்தால் நடியுங்கள் என்று கூறி கதையை சொன்ன நிலையில் நான் கதை சொன்ன விதத்தை பார்த்து அவர் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அவருக்கு நான் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து நடிக்க வைத்தேன் என்று சொல்வதெல்லாம் பொய், உண்மையில் அவர்தான் எங்களுக்கு செலவு செய்தார். சூப்பர் ஸ்டாரின் அண்ணன் எனது படத்தில் நடிக்க காரணம் கடவுள் எனக்கு கொடுத்த வரம், பரிசு என்று கூறலாம்.

பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டத்தின் கட்டாயம் குறித்து இந்த படம் பேசுகிறது. சூப்பர் ஸ்டார் அண்ணன் சத்யநாராயண ராவ் நடிப்பதால் இந்த படம் நிச்சயம் ஓடும் என்று நான் நினைக்கவில்லை, படத்தின் கதை கண்டிப்பாக பார்வையாளர்களை கட்டி போடும் அளவுக்கு இருக்கும் என்பதால் இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றும் இயக்குனர் ஏ.ஆர்.ரசீம் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்