பரிஸ் : கொக்கைன் போதைப்பொருள் விற்பனையாளர் கைது

2 புரட்டாசி 2023 சனி 14:16 | பார்வைகள் : 15835
கொக்கைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பரிசைச்சேர்ந்தஇளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று வெள்ளிக்கிழமை மாலைஇக்கைது சம்பவம் பரிசின் 7 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
Esplanade des Invalides பகுதியில் மாலை 6 மணி அளவில் வீதி கண்காணிப்பில்ஈடுபட்டிருந்த BAC காவல்துறையினர், சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரைகண்காணித்துக்கொண்டிருந்தனர். போதைப்பொருள் விற்பனையில் அவர்ஈடுபடுவதை அறிந்த காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது குறித்த நபரிடம் இருந்து போதைப்பொருள் வாங்குவதற்காகவாடிக்கையாளர் ஒருவர் அவரை நெருங்கினர். இப்போது காத்திருந்தகாவல்துறையினர் துரிதமாக நடவடிக்கையில் ஈடுபட்டு இருவரையும் கைதுசெய்தனர்.
இருவரும் Telegram செயலி ஊடாக தொடர்புகொண்டு இந்த விற்பனையில்ஈடுபட்டமை தெரியவந்தது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர், முன்னதாகஇதே போன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இலத்திரனியல் காப்பு (bracelet électronique) மூலம் கண்காணிக்கப்பட்டு வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1