ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரை அறிவித்த கமலா ஹாரிஸ்
6 ஆவணி 2024 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 6545
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் நடக்க உள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ்டை பிரதமர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் அறிவித்தார்.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக டிம் வால்ஸ் (60) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan